தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த ஐனாதிபதி பணிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதனை விரைவாக கட்டுப்படுத்துவது தொடர்பில் விசேட வைத்தியர்களின் ஆசோனைபெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வைத்தியர்களுக்கு இடையில நேற்று(09) சந்திப்பு ஒன்றுஇடம்பெற்றுள்ளது.
இதன்போது வைரஸ் தொற்றினை அடையாளம் கண்டு அவசியமான பரிசோதனைகளை மேற்கொள்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நிலைமைக்கும் முகம் கொடுக்க கூடிய வகையில் தேவையான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை இதன் போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
Post Comment
No comments